Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்

Webdunia
திங்கள், 17 மே 2010 (08:32 IST)
பிரபல எழுத்தா ளரு‌ம், நாவலா‌சி‌ரியருமான அனுராதா ரமணன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்வது வழக்கம்.

அதுபோல கடந்த 5 ஆ‌ம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அந்த மரு‌த்துவமன ைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு பலமுறை செய்யப்பட்டது.

இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மரு‌த்துவ‌ர ்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் அவரது வீடான திருவான்ம ிய ூர் வால்மீகி நகர், ராஜ கோபாலன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் தஞ்சை மாவட்டம ். இவருக்கு சுதா, சுபா ஆகிய 2 மகள்கள். பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர்.

இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு பெசன்ட்நகர் சென்று அங்கு உள்ள மின்சார சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

எழுத்தாளர் அனுராதா ரமணன ், நாளைக்கு நேரமில்ல ை, ஒரு வீடு இருவாசல், `நித்தம் ஒரு நிலா', `முதல் காதல்' உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை எழுதி உள்ளார்.

இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.

1978 ஆம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார். இப்படி பல பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments