Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் நன்றாகத் தெரியும் கங்கன கிரகணம்

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2010 (13:37 IST)
இந்த நூற்றாண்டின் அதிசய நீண்ட நேர சூரிய கிரகணத்தைக் காண கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் அங்கு கங்கணம் போட்ட சூரிய கிரகணம் அற்புதமாக தெரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 108 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் இந்த கிரகணம் தெரிவிதால் பொது மக்கள் இதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வானில் கண் போன்று தெரிந்த அந்த கங்கண கிரகண வடிவத்தை மக்கள் கண்டு உற்சாகமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரட்னூ, பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகளியில் சிறப்பு தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைத்து இதனைக்காண சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார். பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியுடன் நுண்ணோக்கி ஒன்று இணைக்கப்பட்டதனால் கங்கண வடிவம் அபாரமாக தெரிந்தது என்று அதைக்கண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

25 மாநிலங்களிலிருந்து சுமார் 750 மாணவர்கள் இதனைக் காண வந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மிஜோரம் மாநிலத்தில் 3.15 மணிக்கு கிரகணம் விடுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

Show comments