Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மொழிக‌ள் ப‌கைய‌ாக இரு‌க்க‌க் கூட‌ாது: கருணாநிதி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2009 (08:50 IST)
" தமி​ழு‌க்க ு அ‌ண்‌டை ம ாநி ல ‌மெ ாழி​க‌ள ் வி‌ ரோதமாக இரு‌க்​க‌க ் க ூட ாத ு'' எ‌ன்ற ு முத‌ லமை‌ச்ச‌ர் கரு ​ண ா ​நிதி கூ‌றினா‌ர்.

சென்னையில் நே‌ற்று மாலை நடந்த தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், இ‌ந்த ‌விருது வழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கம​லு‌ம ்,​​ ரஜி​னி​யு‌ம ் எனத ு இரு​பு​ற‌த்​தி​லு‌ம ் அம‌ர்‌ந்​தி​ரு‌க்​கிறா‌ர்​க‌ள ்.​ இ‌தை‌ப ் பா‌ர்‌க்​கு‌ம ் போது,​​ க‌ல ை நிக‌ழ்‌ச்​சி​க​ளி‌ல ்,​​ அர​சி​ய‌ல ் அர‌ங்​கி‌ல ் எ‌ம ். ஜ ி. ஆரு‌ம ்,​​ சிவா​ஜி​யு‌ம ் எ‌ன ் அரு‌க ே வீ‌ற்​றி​ரு‌ந்த கால‌ம ் நி‌னைவு‌க்க ு வரா​ம‌ல ் இ‌ல்‌ல ை. ​ நான் ரஜினியையும், கமலையும் பார்த்து வியப்புறுகிறேன். ஏறத்தாழ இங்கே எழுபதுக்கு மேற்பட்டவர்கள் பரிசுகளை, விருதுகளை, பொற்காசுகளைப் பெற்ற அந்த நிகழ்ச்சியின் போது ஒரு இளம் பெண ், நான் யார் தெரிகிறதா? நான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி என்று சொல்லி, அந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

கலைவாணர் என்.எஸ்.கே. காலத்திலிருந்து இன்றைக்கு ரஜினி, கமல் காலம் வரையில ், கமலைப் போன்றவர்கள், ரஜினியைப் போன்றவர்கள் பலரும் இடையிடையே வந்திருந்தாலும், இந்தக் காலம் வரையில் தொடர்ச்சியாக இருக்கின்ற ஒரு கலைஞன் நான் என்பதை அவர்கள் இருவரும் பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகச் சொல்லிக் கொள்கிறேன்.

ஏ, அப்பா எவ்வளவு காலமாக இந்தக் கலையுலகத்திலே இருக்கிறார் இந்த மனுசன ், இருந்துங்கூட மனம் ஒடிந்து போகாமல், உடல் சோர்ந்தாலுங்கூட, உள்ளம் சோராமல் இன்றைக்கு வந்து, இந்த விழாவினை நடத்திக் கொடுத்திருக்கிறாரே என்று அவர்கள் வியப்படைகிறார்கள். எனக்கு அரசியலில ், பொது வாழ்வில் ஏற்படுகின்ற சோர்வையெல்லாம் அகற்றுகின்ற இடம் கலைஞர்களாகிய நீங்கள் கூடி இருக்கின்ற இடம் தான் என்பதை ஒன்றல்ல, இரண்டல்ல பல முறை சொல்லியிருக்கிறேன்.

உங்களுடைய நடிப்பாற்றல் மாத்திரமல்ல, மனிதநேயம், மனித உணர்வு, மனிதர்களை நேசிக்கின்ற தன்மை, நன்றி உணர்வு இவைகள் எல்லாம் இந்தத் திரையுலகத்திலே, கலையுலகத்திலே பல ஆண்டு காலமாக நான் கண்டுகளித்து இந்த உலகத்திற்கும் நாம் சேவை செய்தாக வேண்டும், பணியாற்றியாக வேண்டும் என்ற அந்த அவாவுடனே தான் இந்த மிகப்பெரும் விழாவிலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற வேண்டுமென்று என்ன நேர்ந்தாலும் உடலுக்க ு, என்ன நேர்ந்தாலும் என் உயிருக்கு; என்பதைப் பற்றிக் கவலைப்படாமல ், எப்படி அரசியல் வாழ்க்கையிலே, பொது வாழ்க்கையிலே என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேனோ, அதைப் போல அந்த வாழ்வுக்கு மருந்தாக இருக்கின்ற உங்களை நான் நிச்சயமாகப் புறக்கணிக்க மாட்டேன், அலட்சியப்படுத்த மாட்டேன் என்பதற்கு அடையாளமாகத் தான ், காலையிலிருந்து எனக்கேற்பட்ட உடல் அசதிக்க ு, உடல் நலிவுக்கு ஐந்தாறு மருத்துவர்கள் வந்திருந்து சிகிச்சை அளித்த போதிலும், அந்தச் சிகிச்சையில் எல்லாம் பெரிய சிகிச்சையா க, அவர்கள் தந்த மருந்தையெல்லாம் வெல்லுகின்ற மருந்தாக இந்த விழா எனும் மருந்து எனக்கு அமைந்தது.

நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர். தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது.

ஆங்கிலத்தைப் போல இது ஆட்சி செய்ய வந்த மொழியல்ல. வேறு மொழிகளைப் போல ஒரு மாநிலத்திலே வந்து தங்களை ஆதிக்கம் செய்ய நினைக்கின்ற மொழியல்ல. இந்த மொழி அனைவராலும் போற்றப்படுகின்ற ஒரு மொழியாக இருப்பதற்குக் காரணமே, இந்தச் செம்மொழியை நாம் பல்லாண்டு காலமா க, இதற்கு எந்தப் பெயரும் சொல்லாமல் தாய்மொழி என்று சொல்லி, இந்த மொழியை காப்பாற்றுகின்ற போராட்டங்களையெல்லாம் நடத்த ி, அந்தப் போர்களில் நாம் தான் வென்றோம் என்ற அளவிற்கு இன்றைக்கு இந்த மொழி நம்மையெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.

இந்த மொழிக்கு உரியவர்கள் நிச்சயமாக மற்ற மொழிக்காரர்களை பகைத்துக் கொள்ளாமல ், மற்ற மொழிக்காரர்களை வெறுக்காமல ், நாம் அனைவரும் ஒரு குடும்பம், நம் அனைவருக்கும் ஒரு குலம் சொந்தம் என்றால், அந்தக் குலத்திற்குப் பெயர், மனித குலம், மாந்தர் குலம், அந்த மனிதர் குலத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு அடையாளமாக எப்படி அவரவர்கள், பழக்கத்திலே உள்ள சைகைகள் பயன்படுகிறதோ அதைப்போல மொழியும் ஒரு கருவி தான ், ஒருவரையொருவர் புரிந்து கொள் ள, ஒருவருக்கு ஒருவர் புரிய வைக் க, ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டு பணியாற் ற, ஒருவருக்குப் புரியாததை மற்றொருவர் சொல் ல, இடையிலே உதவுகின்ற ஒரு கருவி தான் மொழி. அந்த மொழிக்கு தெய்வீகத்தன்மை கொடுத்து, அந்த மொழியைத் தவிர வேறு மொழி, உலகத்திலே பெரிய மொழி அல்ல என்று கூறி, இன்றைக்கு சில பேர் அதற்கான போர்களிலே மனித உணர்வைக் காட்டி நடத்துகின்ற இந்தக் காலத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கிய பெரியார், அண்ண ா, இவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்ன கருத்து, மொழி ஒரு கருவியாக நமக்கு இருக்க வேண்டுமே அல்லாமல், அந்த மொழிக்கு விரோத உணர்ச்சி, பகை உணர்ச்சி, மனித உணர்ச்சிக்கு மாறுபட்ட உணர்ச்சியை நாம் ஏற்றக்கூடாது என்று பல முறை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அந்த வழியிலே இந்த ஆட்சிக் சக்கரத்தை இன்றைக்கு சுழற்றிக் கொண்டிருக்கின்ற நானும், எல்லா மொழியிலும் திறமை இருக்கின்றது, எல்லா மொழியிலும் வன்மை இருக்கிறது, ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதை நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம். தமிழுக்கு மலையாளம் விரோதம் அல்ல, தமிழுக்கு தெலுங்கு விரோதம் அல்ல, தமிழுக்கு கன்னடம் விரோதம் அல் ல, அதைப்போல கன்னடம் தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது, மலையாளம் தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது, தெலுங்கு தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது. கன்னடமும், களி தெலுங்கும் கவின், மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடியதையும் மறந்து விடாமல ், எல்லாம் சகோதர மொழிகள் தான் எ‌‌ன்று கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments