Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபெய‌ர்‌ந்து வாழு‌ம் ‌‌பி.‌சி, எ‌ம்.‌பி.‌சி., ‌சீ‌ர்மர‌‌பினரு‌க்கு வாழு‌ம் மாவ‌ட்‌ட‌த்‌திலேயே சா‌‌தி‌ச் சா‌ன்‌‌றித‌ழ் வழ‌ங்க கருணா‌நி‌தி உ‌த்தரவு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (14:26 IST)
'' ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவு‌ம் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர்க்கு வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றி த‌ ழ ் வழங்க‌ப்படு‌ம்'' எ‌ன்ற ு முதலமைச்சர் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள ்ளா‌ர்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌‌ப்‌பி‌ல ், தென் மாவட்டங்களில் இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு மாவட்ட எல்லை வரையறையின்றித் தமிழகத்தில் எங்கு வ ா‌ ழ்ந்தாலும் சாதிச் சான்றி த‌ ழ்கள் வழங்கிட வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், தம ி‌ ழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் கருத்துரைகள் கேட்கப்பட்டன. அதன்படி தம ி‌ ழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று சான்றி த‌‌ ழ ் வழங்குவதற்குரிய அளவுகோல்கள் அவர்கள் வேறுபகுதிகளில் குடியேறுவதால் மாற்றம் பெறாது என்பதும்;

எனவே அவர்கள் குடிபெயர்ந்து வந்தது மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அல்லது எங்கிருந்து குடிபெயர்ந்தனரோ அந்தப் பகுதியில் அவர்களது வகுப்பின்நிலை ஆகியவற்றிற்கான ஆதாரம் அளிக்கப்பட்டால் அத்தகைய சான்றி த‌ ழ்களைக் குடியேறிய பகுதிகளில் உள்ள தகுதிவ ா‌ ய்ந்த அலுவலர்களே வழங்கலாம் என அரசுக்குக் கருத்துரை வழங்கியுள்ளது.

தம ி‌ ழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ள இந்தக் கருத்துரையை ஏற்றுத் தென்மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், அப்பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து மாநிலத்தின் வேறு பகுதிகளில் குடியேறியுள்ள நிலையில்,

அவர்கள் தாங்கள் குறிப்பிட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும், அவ்வகுப்பு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதற்கும் ஆதாரமாக, அப்பகுதிகளில் தங்கள் பெற்றோருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றி த‌ ழ ் போன்றவற்றை வழங்கினால், அவர்களுடைய வகுப்பு அவர்களது சொந்த மாவட்டத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதோ அதற்குரிய சான்றி த‌ ழ்களைக் குடியேறிய பகுதிகளில் உள்ள சாதிச் சான்றி த‌ ழ ் வழங்கும் அலுவலர்கள் வழங்கலாம் என முதலமைச்சர் கருணா‌நி‌த ி ஆணையிட்டுள்ளார் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments