Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள ம‌க்களு‌க்கு கருணா‌நி‌தி ஓணம் வா‌ழ்‌‌த்து

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (12:59 IST)
ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அருமை உடன்பிறப்புகள் அனைவர் வ ா‌ழ ்விலும் அன்பும், அமைதியும், வளமும் செழித்து இன்பம் பெருகிட எனது உளமார்ந்த நல்வ ா‌ழ ்த்துகள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், ''கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் “ஓணம் திருநாள்” என மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

மலையாள மக்களின் கலை, பண்பாட்டுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் மகத்தான திருநாளாகக் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம், வஞ்சகம், சூது போன்ற கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, மனித நேயம் ஆகியவை உலகெங்கும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர், நண்பர்கள் சூழ ஓணம் திருநாளை மக ி‌ழ ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடி மக ி‌ழ ்ந்திட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அவர்கள் நிறைந்து வாழும் கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான நாகர்கோவில், கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், சென்னை மாவட்டத்திற்கும் 2006 ஆம் ஆண்டிலேயே சிறப்பு விடுமுறை வழங்கியுள்ளது இந்த அரசு.

இது, தம ி‌ழ ்பேசும் மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களும் தங்கள் பண்பாடு போற்றிவாழ உதவிட வேண்டுமெனும் இந்த அரசின் நல்லெண்ண உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இந்த உணர்வோடு தம ி‌ழ ்ச் சமுதாய மக்களின் சார்பில், இன்று (2.9.2009) ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அருமை உடன்பிறப்புகள் அனைவர் வ ா‌ழ ்விலும் அன்பும், அமைதியும், வளமும் செழித்து இன்பம் பெருகிட எனது உளமார்ந்த நல்வ ா‌ழ ்த்துகள் உரித்தாகுக'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வா‌‌ழ்‌த்து‌‌ச் செ‌ய்‌‌தி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments