Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நான் கடவுள்' படம் விவகாரம்: இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா போட உத்தரவு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:59 IST)
‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ஊனமுற்றோரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு அறிவிக்கும் வகையில் வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FILE
தமிழ்நாடு ஊனமுற்றோர் நலச்சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கடவுள்’ திரைப்படத்தில், ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாக சித்தரித்துள்ளதுடன், அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே, ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று க ூ‌ றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவை விசாரித்த 5வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி முகமது அபுதார், மனு மீது திரைப்பட தணிக்கைத்துறை, படத்தின் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஜூலை 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலா, சீனிவாசன் மற்றும் திரைப்பட தணிக்கைத்துறை ஆகியோர் தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராயினர். ஆனால், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அவர்களின் வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து, 3 பேருக்கும் பதில் அளிக்குமாறு அறிவிக்கும் வகையில் அவர்கள் அலுவலகம், வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்றும், தண்டோராவுக்கான செலவை மனுதாரர் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடு‌த்த ு வழக்கு விசாரணை, செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள ்‌ ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments