Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'நான் கடவுள்' படம் விவகாரம்: இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா போட உத்தரவு

'நான் கடவுள்' படம் விவகாரம்: இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா போட உத்தரவு
சென்னை , செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:59 IST)
‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ஊனமுற்றோரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு அறிவிக்கும் வகையில் வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FILE
தமிழ்நாடு ஊனமுற்றோர் நலச்சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கடவுள்’ திரைப்படத்தில், ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாக சித்தரித்துள்ளதுடன், அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே, ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவை விசாரித்த 5வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி முகமது அபுதார், மனு மீது திரைப்பட தணிக்கைத்துறை, படத்தின் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஜூலை 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலா, சீனிவாசன் மற்றும் திரைப்பட தணிக்கைத்துறை ஆகியோர் தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராயினர். ஆனால், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அவர்களின் வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து, 3 பேருக்கும் பதில் அளிக்குமாறு அறிவிக்கும் வகையில் அவர்கள் அலுவலகம், வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்றும், தண்டோராவுக்கான செலவை மனுதாரர் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடு‌த்தவழக்கு விசாரணை, செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil