Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல்: நாளை வே‌ட்பு மனு‌த்தா‌‌க்க‌ல் செ‌ய்ய கடை‌சி நா‌ள்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (08:40 IST)
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளில் வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் செ‌‌ய்ய நாளை கடை‌சி நாளாகு‌ம். நேற்று ம‌ட்டு‌ம் ஒரே நா‌ளி‌ல் 22 பேர் மன ு‌த் தாக்கல் செய்தனர்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில், கடந்த 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சனிக்கிழமை வரை தொண்டாமுத்தூர் தொகுதியில் 4 பேர், பர்கூர் தொகுதியில் 6 பேர், கம்பம் தொகுதியில் 2 பேர், இளையான்குடி தொகுதியில் 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். சனிக்கிழமை வரை மனு தாக்கல் செய்தவர்கள் அனைவரும் சுய ே‌ட ்சைகள். மனு தாக்கல் தொடங்கி, 6வது நாளான நேற்றுதான் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பர்க ூ‌ர் தொகு‌தி பா.ஜ.க. வே‌ட்பாள‌ர் கே.அசோகன், மா‌ற்று வே‌ட்பாள‌ர் ஜி.சிவப்பிரகாஷ ், தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர் வி.சந்திரன், சுயே‌ட்சைக‌ள் கே.ஆர்.கிருஷ்ணன், ஆர்.மணிகண்டன் என 5 பே‌ர் மன ு‌த் தாக்கல் செய்தனர்.

தொண்டாமுத்த ூ‌ர் தொகு‌தி பா.ஜ.க. எம்.சின்னராஜ், மா‌ற்று வே‌‌ட்பாள‌ர் ஏ.ஸ்ரீதரமூர்த்தி, தே.மு.‌தி.க. வே‌ட்பாள‌ர் கே.தங்கவேலு, தே.மு.‌தி.க. மா‌ற்று வே‌ட்பாள‌ர் கே.பி.எஸ்.ரங்கராஜ், சுயே‌ட்சைக‌ள் ஆர்.கே.மணி, ஜி.ராமசாமி, எம்.மன்மதன் என 7 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கம்பம் தொகுதியில் 2 பேரும், இளையான்குடி தொகுதியில் பா.ஜ.க. வே‌ட்பாள‌ர் பி.எம்.ராஜேந்திரன் உ‌ள்பட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்த எம்.ராமசுப்ரமணியன், சி.மருதநாயகம், யு.நாகூர் மீரான் பீர் முகம்மது, எஸ்.ஆறுமுகராஜ் ஆகியோர் உட்பட இதுவரை மனு தாக்கல் செய்த அனைவரும் சுய ே‌ட ்சைகள்.

த ி. ம ு. க கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாள். அன்று அஷ்டமி என்பதால், இன்றே அனைத்து அரசியல் கட்சியினரும் மன ு‌த் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்ககூடும் என்று தெரிகிறது.

வேட்பு மன ு‌த ்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை 30ஆம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள். ஆகஸ்ட் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

இன்று முதல் மீண்டும் மழை ஆரம்பம்.. 5 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கூறியதா? போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்.. போராடும் மக்களை நேரில் சந்திக்கிறார்..!

Show comments