Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் புயல் - வானிலை

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2009 (20:13 IST)
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிஜ்லி ( BIJLI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன ்ற ு காலை 8.30 மணி நிலவரப்படி விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 300 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும், மேலும் வலுவடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிஜ்லி புயலால் தமிழ்நாடு, கேரளாவிற்கு பாதிப்பிருக்காது என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாடு, கேரளா, தெற்கு கடலோரப் ஆந்திரா, கேரளாவில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 60-70 கி.மீ. வேகத்தில் புயல் காற்று விசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments