Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக வேட்பாளர்கள் பட்டியல்: மதுரையில் மு.க. அழகிரி போட்டி;

திமுக வேட்பாளர்கள் பட்டியல்: மதுரையில் மு.க. அழகிரி போட்டி;
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் கருணாநிதி இந்த பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

மதுரை தொகுதியில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூரிலும், ரித்தீஷ் ராமநாதபுரத்திலும் போட்டியிடுகிறார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், தி.மு.க.வுக்கு 21 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

கன்னியாகுமரி-ஜெ.ஹெலன் டேவிட்சன், தூத்துக்குடி-எஸ்.ஆர். ஜெயதுரை, ராமநாதபுரம்-சிவக்குமார் என்கிற ஜே.கே.ரித்திஷ் (நடிகர்), மதுரை-மு.க.அழகிரி, தஞ்சாவூர்- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நாகப்பட்டினம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன், பெரம்பலூர்- நடிகர் நெப்போலியன்

கரூர்- கே.சி.பழனிசாமி, பொள்ளாச்சி-ம.சண்முகசுந்தரம், நீலகிரி (தனி) -ஆ. ராசா, நாமக்கல்-சே.காந்தி செல்வன், கள்ளக்குறிச்சி-ஆதி.சங்கர், திருவண்ணாமலை-த.வேணுகோபால்,

தர்மபுரி-தாமரைச்செல்வன், கிருஷ்ணகிரி-இ.ஜி.சுகவனம், அரக்கோணம்-எஸ்.ஜெகத்ரட்சகன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன், வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன், மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

Share this Story:

Follow Webdunia tamil