Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 5, 6ல் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2009 (19:17 IST)
ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

மழை பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், எமது தமிழ்.வெப்துனியா.காம்-மிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தெற்கு கடலோர மாவட்டங்களிலும், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்பட தென் மாவட்டங்களிலும் ஏப்ரல் 5 அல்லது 6ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகை, தஞ்சை உட்பட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். ஏ‌ப்ர‌ல் 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மேற்கண்ட தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உட்பட தமிழக கடல் பரப்பில் கடல் சீற்றமும் காணப்படும்.

நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஏப்ரல் 6, 21 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

Show comments