அப்போது அங்கு திரண்டு நின்ற தொண்டர்கள் மத்திய பேசிய அவர், இன்று முதல் தேர்தல் முடியும் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.
மக்களை நம்பி தே.மு.தி.க. முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது என்று பேசிய விஜயகாந்த், தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி அமைத்துள்ளேன் என்றார்.
பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 சீட் தான் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தேசிய கட்சிகளின் நிலைமை அதுதான் என்றும் மாநில கட்சிகளை நம்பித்தான் தேசிய கட்சிகள் உள்ளது என்றார்.