Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌‌ம் வ‌லியுறு‌த்‌தி ஜெயலலிதா உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2009 (18:32 IST)
இலங்கையில் உடனடியா க போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு ம‌த்‌‌தி ய அரச ை வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 10ஆ‌ம் தே‌தி த‌‌மிழக‌ம் முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத அற‌ப்போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை‌யி‌ல் தனது தலைமை‌யி‌ல் உண்ணாவிரதம் நடைபெறு‌ம் எ‌ன்று‌ம் அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெய‌ல‌‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன்பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் உருவாக வேண்டும்.

த‌மி‌ழ் இன‌த் தலைவ‌ர் எ‌ன்று த‌ன்னை‌த் தானே த‌ம்ப‌ட்ட‌ம் அடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌தி.மு.க. அர‌சி‌‌ன் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியு‌ம், அவ‌ர் தா‌‌ங்‌கி ‌‌நி‌ற்கு‌ம் ம‌த்‌திய அரசு‌ம் இ‌ந்த இன‌ப்படுகொலையை வேடி‌க்கை‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கி‌ன்றன‌.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அ.இ.அ.தி.மு.க. சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்த உள்ளது.

அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறும். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தாம் தலைமை ஏற்க இருப்பதாகவும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும், ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் திரட்டப்படும் நிதியை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரதப் அறப்போராட்டத்தில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கழக உடன் பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் எ‌ன்றும் ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!

காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்

Show comments