Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி உ‌ண்ணா‌விரத அ‌றி‌வி‌ப்பு நாடக‌ம் : ராமதா‌ஸ்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:36 IST)
'' முத லமை‌ச்ச‌ர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம ்'' எ‌ன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார் எ‌‌ன்றா‌ர்.

காங்கிரஸ் கட்சியின் 35 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இ‌ந ்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இலங்கைத் தமிழர் களு‌க்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வர ு‌‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறைய ின‌ர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத ்‌தியு‌ள்ளன‌ர். இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் எ‌ன்றா‌ர் ராமதா‌ஸ்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான். ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம். இலங்கைப் பிரச ் சனையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் எ‌ன்று ராமதாஸ் குற்றம ்சா‌ற்‌றினா‌ர்.

போலீஸ்காரர்களால் என் உயிருக்கு ஆபத்து!? அஜித்குமார் வழக்கு முக்கிய சாட்சி பரபரப்பு புகார்!

விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?

இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

Show comments