" தமி ழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலை ம.தி.மு.க புறக்கணிக்கும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வ ெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெற இருக்கும் தற்போதைய தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காமல் புறக்கணிக்கும்.
2006- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி கட்டவிழ்த்துவிட்ட குண்டர்களின் கொலை வெறித் தாக்குதல், அதனை தடுக்காமல் முழுக்க உதவிய காவல்துறையின் போக்கு அரசு அதிகார துஷ்பிரயோகம் இவையெல்லாம் அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் தொடரவே செய்கின்றன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் தற்போது நடக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து எப்படியாவது வெற்றியை பெற்று மக்கள் மன்றத்தில் செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தைக் காட்ட திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியினுடைய ஒரு எடுபிடி ஏஜென்டாவார். எனவே, இந்தத் தேர்தலில் ம.தி.மு.க பங்கேற்கப் போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.