இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் காரை யாரோ சில சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவை வன்செயலோ, மனித உடல், உடைமைகள் தாக்கப்படுவதாலோதான் தீர்க்க முடியும் என்று செயல்படுவது அநாகரீக அரசியல் மட்டுமல்ல, ஆதிகால காட்டு மிராண்டித்தனமான வழி முறையாகும்.
இனியும் இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் காவல்துறை கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். தா.பாண்டியன் காருக்கு தீ வைத்த குற்றவாளிகளை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வேண்டுமென்று கே.வி.தங்கபாலு கேட்டுக் க ொண்டுள்ளார்.