Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிக‌ளு‌ம் போர் நிறுத்தம் செய்ய வே‌ண்டு‌ம்: தி.மு.க.

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:24 IST)
இல‌‌ங்க ை அரச ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ை தொட‌ர்‌ந்த ு ‌ விடுதலை‌ப்பு‌லிகளு‌‌ம ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌‌ர்.

சட் ட‌ ப்பேரவ ை இ‌ன்ற ு தொட‌ங்‌கிய‌து‌ம ் இலங்கையில் போர் நிறுத்தம் அற ி‌ வி‌க்க‌ப்ப‌‌ட்டத ு குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌‌பின‌ர ் ‌ பீ‌ட்ட‌ர ் அ‌ல்போ‌ன்‌ஸ ் பேசுகை‌யி‌ல ், இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று வந்த பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு செய்துள்ளது. தமிழ்மக்கள் எதிர்பார்த்த, சட் ட‌ ப்பேரவ ை நடந்த விவாதத்துக்கும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதற்கும், பிரணாப் முகர்ஜியின் பேச்சுவார்த்தை காரணமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம். அதற்கேற்ப விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்திற்கு முன் வரவேண்டும ். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட ு க‌ட்‌சி‌யி‌ன ் தெளிவான நிலைப்பாடு என்ன? எ‌‌ன்ற ு கே‌ட்டா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ு உறு‌ப்‌பின‌ர ் சிவபுண்ணியம ், விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை விடுதலைப் புலிகள்தான் பாதுகாக்கின்றனர் எ‌ன்றா‌ர ்.

அமை‌ச்ச‌ர ் துரைமுருகன் பேசுகை‌யி‌ல ், இலங்கையில் போர் நிறுத்தம் மூலம் அங்குள்ள தமிழர்களை வெளியே கொண்டு வந்து சேர்க்க மத்திய அரசு நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்துள்ளது எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு குறு‌க்‌கி‌ட்ட ு பே‌சி ய இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ு உறு‌ப்‌பின‌ர ் சிவபுண்ணியம ், தி.மு.க.வின் கருத்து வெளிப்படையாக வராமல் உள்ளது எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அவ ை மு‌ன்னவ‌ர ் அன்பழகன ், எங்கள் மனதில் இருப்பதெல்லாம் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதான். இந்த பிரச்சனையில் ஒவ்வொரு அடியாகத்தான் எடுத்து வைக்க முடியும். இதில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அறிவித்துள்ளது. இதற்கு பிரபாகரனோ, விடுதலைப் புலிகளை சேர்ந்தவர்களோ நாங்களும் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்கிறோம் என்று கூறவில்லை. இலங்கை சொன்ன அளவிற்கு கூட விடுதலைப்புலிகள் சொல்ல வில்லை.

இந்த பிரச்சனையில் இங்கு நாம் தேர்தலை மனதில் கொண்டு வேகமாக அடியெடுத்து வைக்கலாம். அங்கு முடியாது. எனவே ஈழத் தமிழர்களை காப்பதுதான் தி.மு.க.வின் ஒரே நோக்கம் எ‌ன்றா‌‌ர்.

மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌டு உறு‌ப்‌பின‌‌ர் நன்மாறன் பேசுகை‌யி‌ல், இலங்கையின் போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறோம். இது நிரந்தர போர் நிறுத்தத்தை நோக்கி செல்ல வேண்டும். இதை பயன்படுத்தி அமைதி பேச்சுவார்த்தையும் நடக்க வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

ம‌.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகை‌யி‌ல், பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி உள்ளது. ஐ.நா.சபை பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் தங்களுடைய சேவையை அங்கு செய்ய முடியவில்லை. 48 மணி நேர போர் நிறுத்தத்தை முழுமையாக பயன்படுத்தி பீரங்கி, விமானப்படையை மேலும் வலுவாக்கி விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்கத்தான் இந்த முயற்சி நடக்கிறது எ‌ன்றா‌ர்.

‌ பி‌‌ன்ன‌ர் பே‌சிய அவை மு‌ன்னவ‌ர் அன்பழகன ், போர் முனையில் ஈழத் தமிழர்களை காக்க இரு தரப்பினரும் பின்வாங்க வேண்டும். பாதுகாப்பு கருதி விடுதலைப்புலிகள் இருக்கும் இடத்தில் மக்கள் குவிந்து விட்டனர். அங்கு தாக்குதல் நடத்தும் போதுதான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அலசி ஆராய முடியாது. முழு தகவலும் நமக்கு கிடைப்பதில்லை. இலங்கையில் தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்றுதான் அந்நாட்டு அரசு கூறுகிறது. அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுகிறார்கள். மொத்தத்தில் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments