Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக 7வது நாளாக மாணவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (12:07 IST)
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 7வத ு நாளா க இ‌ன்று‌ம ் உண்ணாவிரதம் மேற்கொண்ட ு‌ ள்ளன‌ர். இத‌னிடையே மய‌க்க‌ம் அடை‌ந்த மேலு‌ம் 4 மாணவ‌ர்க‌ள் செ‌‌ங்க‌ல்ப‌ட்டு அரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர், கல்லூரி வளாகம் முன்பு கட‌ந்த 22ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

நே‌ற்று மு‌ன்‌தின‌‌ம் ஆறுமுக நயினார், ஜம்புகுமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் துரியன், திருமுருகன், முனிஷ்குமார், நவீன் ஆகிய மாணவர்கள் நே‌ற்று மாலை மயங்கி ‌விழு‌ந்தனர். உடனடியாக அவ‌ர்க‌ள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர். அவ‌ர்கள் மருந்து மாத்திரை சாப்பிட மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது.

மாணவ‌ர்க‌ள் விஜயகுமார், பிரவீன், சுரேஷ், ராஜ்குமார், மணிவேல், முஜிபுர் ரக்மான், ராஜா, மூர்த்தி ஆகியோர் மட்டும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மரு‌த்துவ‌ர்க‌ள் அங்கேயே தங்கி இருக்கின்றனர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைத்துள்ளனர். அவ்வப்போது, மாணவர்களின் உடலை பரிசோதனை செய்கின்றனர்.

நே‌ற்று மாலை நடிகர் வடிவேலு, இயக்குனர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கவுதம் ஆகியோர் செ‌ங்க‌ல்ப‌ட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தனர்.

பின்னர் அவ‌ர்க‌ள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்றன‌ர். அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களிடமும், உண்ணாவிரதத்தை கை‌விடு‌ம்படி கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

ஆனா‌ல் மாணவ‌ர்க‌ள் "யார் சொன்னாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது, இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே, போராட்டத்தை கை விடுவோம்'' என்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதனிடையே வகுப்பு ரத்து இ‌ன்று செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் ஜனார்த்தனம் அறிவித ்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments