Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. ஆ‌ட்‌சியை க‌வி‌ழ்‌க்க ச‌தி: ‌பீ‌ட்ட‌ர் அ‌‌ல்போ‌ன்‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:24 IST)
இலங்கையில ் தமிழர்கள ் அழிக்கப்படுவத ை காங்கிரஸ ் கட்ச ி ஒருபோது‌ம் அனுமதிக்காது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌‌பீ‌ட்ட‌ர் அ‌ல்போ‌ன்‌ஸ், காங்கிரச ை தனிமைப்படுத்த ி த ி. ம ு. க ஆட்சிய ை கவிழ்ப்பதற்க ு சிலர ் சத ி செய்கிறார்கள் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

தமிழ க சட் ட‌ப்பேரவை‌யி‌‌ல் இன்ற ு இலங்க ை‌த் தமிழர ் பிரச்சன ை தொடர்பா க நடைபெற் ற சிறப்ப ு கவனஈர்ப்ப ு தீர்மானத்தின ் மீதா ன விவாதத்தில ் காங்கிரஸ ் உறுப்பினர ் பீட்டர ் அல்போன்ஸ ் பேசுகை‌யி‌ல், இலங்கையில் தமிழர்களை கொ‌ன்று கு‌வி‌க்கு‌ம் அந்தநாட்டு அரசுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர். இந்த போர் நிற்காதா? அப்பாவி தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காதா? என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கிறது.

இத ு 52 ஆண்டுகா ல பிரச்சன ை. இதில ் காங்கிரச ை தனிமைப்படுத்த ி த ி. ம ு. க ஆட்சிய ை கவிழ்ப்பதற்க ு சிலர ் சத ி செய்கிறார்கள ். இதில ் தமிழர ் விரோ த கட்சியா க காங்கிரச ை தனிமைப்படுத்துவத ை ஏற் க முடியாத ு.

தம ிழக‌த்‌தி‌ல் இலங்கை பிரச்சனையை வைத்து சில கட்சிகள் காங்கிரசை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. திருடியவன் திருடன் திருடன் என்று சொல்லி தப்புவது போல சிலர் எதற்கு எடுத்தாலும் காங்கிரசை குறை சொல்லி வருகிறார்கள். விடு தலைப்புலிகள் இலங்கை தமிழர்களுக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு முக்கிய தமிழ்த் தலைவர்களை கொன்று குவ ி‌த ்திருக்கிறார்கள். இலங்கை அரசால் ஏற்பட்ட உயிர் இழப்பை விட விடுதலைப்புலிகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தான் அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை மறைத்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவது சரியல்ல.

இன்னும் எத்தனை நாள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டுக் கொண்டு இருக்க போகிறோம். ஏற்கனவே 2 முறை அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது 3-வது போர் நிறுத்தம். நாம் இங்கிருந்து அனுப்பிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க விடாமல் விடுதலைப்புலிகள் தடுப்பதாக செஞ்சிலுவை சங்கமே கூறி இருக்கிறது. காயமடைந்த 70 பேரை மரு‌த்துவமனை‌க்கு கொண்டு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் 3 நாட்கள் தடுத்து வைத்திருப்பதாகவும் செஞ்சிலுவை சங்கம் புகார் கூறி இருக்கிறது. இதையெல்லாம் கேட்க கூடாதா? இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுக்க வருபவர்கள் அரசியலை கடந்து மனது சுத்தமாக வாருங்கள். காங்கிரஸ் மார்தட்டி தலைமை ஏற்கும்.

திரிகோண மலையில் அமெரிக்கா ஏவுகணை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டதாக இலங்கை அரசு அதிகாரிகளே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவம் நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை இந்திய ராணுவம் உளவு பார்ப்பதாகவும் வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும் குறை கூறுவது நமது நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி விடும். இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு பேரு‌ந்த ுகளை தீயிட்டு க ொள ுத்தி நமது தமிழர்களை எரிக்க வேண்டுமா? பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறி கொண்டு நமது தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.

திருமாவளவன் உண்ணாவிரதத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இது தேவையற்றது. காங்கிரசை பலவீனப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது. ராஜீவ்காந்த ி ஜெயவர்த்தன ே ஒப்பந்தம்தான ் இலங்கையில ் அமைத ி ஏற்படுவதற்கா ன நிரந்த ர தீர்வா க அமையும ்.

விடுதலைப்புலிகள ் அதன ் அடிப்படையில ் ஆயுதங்களைக ் கீழேபோட்ட ு பேச்சுவார்த்த ை நடத் த தயாரா க இருக்கிறார்கள ா என்பதற்க ு இங்குள்ளவர்கள ் உறுத ி அளிக் க வேண்டும ். அங்க ு வாழும ் அப்பாவ ி தமிழர்களுக்க ு ஆதரவ ு குரல ் கொடுக் க காங்கிரஸ ் கட்ச ி எப்போதும ் தயாரா க இருக்கிறத ு. இன்ற ு முதல்வர ் கொண்ட ு வரும ் தீர்மானத்தையும ் நாங்கள ் ஆதரிப்போம் எ‌ன்று ‌பீ‌ட்ட‌ர் அ‌ல்போ‌ன்‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments