Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான ‌‌நாகை மீனவ‌ர்க‌ள் ‌‌பிணமாக ‌கிட‌ந்தன‌‌ர்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (10:51 IST)
கட‌ந்த ‌சில வார‌ங்களு‌க்கு மு‌ன்பு கட‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றபோது மாயமான நாகை ‌மீனவ‌ர்க‌ள் 4 பே‌ரி‌ன் சடல‌ம் கரை ஒது‌‌ங்‌கியது. இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

நாகபட்டினத்தில் இருந்து கடந்த 12 ஆ‌ம் தேதி கன்னியப்பன், நாச்சியப்பன், சித்ரவேல், சண்முகராஜ் ஆகிய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மூழ்கியதாக மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காணாமல் போன 4 மீனவர்களையும் கடந்த 10 நாட்களாக தேடு‌ம் ப‌ணி ‌தீ‌விரமாக நட‌ந்து வ‌ந்தது. இதற்கிடையே தங்கச்சிமடம் கடற்கரையில் நே‌ற்‌றிரவு ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில் தங்கச்சிமடம் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் பாலசிங்கம், உத‌வி ஆ‌ய்வாள‌ர் பரக்கத்துல்லா ஆகியோர் அங்கு விரைந்து சென்று ‌உடலை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

‌‌ பி‌ன்ன‌ர் நாக‌பட்டினம் காவ‌ல்துறைய‌த்து‌க்கு கொடு‌த்த தகவலை‌த் தொட‌ர்‌ந்து அங்கிருந்து வந்த மீனவர்கள், இற‌ந்தவ‌ர் நாகை மீனவர் சித்ரவேல் (45) என்று தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இ‌ன்று அ‌திகாலை கன்னியப்பன், சண்முகம், நாச்சியப்பன் ஆகிய மீனவர்கள் உடல்களும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்து ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ஒரே நா‌ளி‌ல் மூ‌ன்று பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் கட‌ற்கரை‌யி‌ல் ஒது‌ங்‌கியதை தொட‌ர்‌ந்து ‌மீனவ‌ர்க‌ள் ம‌த்‌‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌ச்ச‌ம் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments