Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்தா‌ண்டு த‌மிழக‌த்‌‌தி‌ற்கு 1,250 மெகாவா‌ட் ‌மி‌ன்சா‌ர‌ம்

Webdunia
கூடங்குளம் அணுமின் ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து 925 மெகாவாட் மின்சாரமும், நெ‌ய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன‌த்‌தி‌ல் இரு‌ந்து 325 மெகாவாட ் மின்சாரமும் இந்தாண்டு கிடைக்கும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் ப‌ர்னாலா ஆ‌ற்‌றிய உரை‌யி‌ல், தமி‌ழ்நாட்டில் தொழில் வளம் பெருக ி வருவதால், மின்தேவை கடந்த இரண்டு ஆண்டுகளில ் வேகமாக உயர்ந்துள்ளது. தமி‌ழ்நாடு மின்வாரியத்தின் ‌நிலையங்களின் உற்பத்தியைத் திறம்ப ட நி‌ர்வகித்தும், பிற மாநிலங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல ் செ‌ய்தும் மின் விநியோகத்தைச் சீரமைப்பதற்கா ன அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.

இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த மாதம் முதல் மின ் விநியோகம் கணிசமான அளவிற்குச் சீரடைந்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன ை மேலும் பெருக்கிட பல்வேறு திட்டங்களை அரச ு செயல்படுத்தி வருகிறத ு.

வடசென்னையில ் 1200 மெகாவாட் ம‌ற்று‌ம் மேட்டூரில் 600 மெகாவாட ் உற்பத்தித் திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்த ி நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் 2008 ஆம ் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், பாரத மிகுமின ் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குட ி மாவட்ட‌ம் உடன்குடியில் தலா 800 மெகாவாட ் திறன்கொண்ட இரண்டு உற்பத்தி நிலையங்கள ை நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவை தவிர, தற்போது முடிவடையும் நிலையில் உள் ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியில ் தமி‌ழ்நாட்டின் பங்காக 925 மெகாவாட் மின்சாரமும், நெ‌ய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் மூலமாகக் கூடுதலாக 325 மெகாவாட ் மின்சாரமும் இந்த ஆண்டு கிடைக்கும். மேற்கூறி ய திட்டங்களின் மூலமாக வரும் ஆண்டுகளில் தமிழகத்தின ் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும் எ‌ன்று ஆளுந‌ர் தமது உரை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments