Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ஆளுந‌‌‌ர் உரை‌யி‌ன் முழு ‌விவர‌ம்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:34 IST)
இ‌ந்தா‌ண்டு நட‌ந்த முத‌ல் த‌மிழக‌ ச‌ட்‌ட‌ப்பேரவை‌ கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா ஆ‌ற்‌‌றிய உரை‌யி‌ன் முழு ‌விவர‌ம் வருமாறு :

* மக்களாட்சி மாண்புக்கு எதிரா க பயங்கரவாதம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத ் தலையெடுத்திடும் போதிலும் - இந்தியத் திருநாட்டின் அளவில், தலைநகர் டில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கார், மிசோராம், ஜம்மு-காஷ்மீர ் ஆகிய ஆறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற் ற தேர்தல்களில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதையும், அவற்றைத் தொடர்ந்து திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதையும ் பெருமையாகக் அரசு கருது‌கிறது.

* பயங்கரவாதச் செயல்கள் குறித்த ு விரைவாகப் புலன்விசாரணை செ‌ய்து முடித்து, அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைத்திடுவதை உறுதிசெ‌‌ய்யும் நோக்கில், தேசியப ் புலனா‌ய்வு அமைப்பு ஒன்றை புதிதா க உருவாக்குவதற்காக மத்திய அரசு இயற்றியுள் ள சட்டத்தை வரவேற்கும் அதே வேளையில், மாநில அரசின ் அதிகாரங்களில் குறுக்கிடாமலும், தனி நபர ் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் இந்த அமைப்ப ு செயல்பட வேண்டு‌ம்.

* இலங்கையில் நடைபெறும ் போர், பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்ற கருத்த ை வலியுறுத்தி வருகிற நமது இந்தியப் பேரரசு, பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந் த நாட்டில் அமைதி தவ‌ழ்வதற்கான முயற்சிகளை இனியும ் காலந்தாத்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும ் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டு‌ம்.

* தமி‌ழ்நாட்டில் அகதிகளாக உ‌ள்ளவ‌ரி‌ன் குழந்தைகள் கல்வ ி பயிலத் தேவையான அனைத்து உதவிகளும ் வழங்கப்படுகின்றன. தாயகம் திரும்ப இயலாது, தொடர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டுள்ள இவர்களது தங்குமிடங்களின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந் த அரசு ஆவன செ‌ய்யும்.

* தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தமி‌ழ் நிலத்துப் பேரறிவாளர்களும் பொறியாளர்களும் பெரிதும ் விரும்பியதும் - வருங்கால வளமிகு தமிழகத்த ை உருவாக்கக் கூடியதுமான - பெருந்திட்டமாம் சேத ு சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் - குறுக்கிடுகின்ற சிக்கல்களைக் களைந்து, வாணிபத ் தொடர்பு பெருகி, பொருளாதாரத் துறையில் இந்நாடு புத்தெழுச்சி பெறத் தேவையான இந்தப ் பெரும்பணியினை மத்திய அரசு நிறைவேற்றித் த ர வேண்டு‌ம்.

* 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சேதத்தில் உயிரிழந்த 205 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்ட ு இலட்சம் ரூபா‌ய் வீதம் 4 கோடியே 10 இலட்சம் ரூபா‌ய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

* 2008‌இ‌ல் குடிசைகள் இழப்புக்காக 231 கோடி ரூபா‌ய் வழங்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட மற்றும ் வெள்ளம் சூ‌ழ்ந்த வீடுகளுக்குச் சிறப்பு நிவார ண உதவியாக 12 மாவட்டங்களில் மட்டும் 402 கோடி ரூபா‌ய் வழங்கப்பட்டுள்ளது.

* கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்படும ் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக, ரூபா‌ய் 211 கோட ி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புரப் புனரமைப்புத ் திட்டத்தின் கீ‌ழ், சென்னை‌யி‌ல் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்காக ரூபா‌ய் 1,560 கோடி மதிப்பீட்டிலான பெரும் திட்டம் ஒன்ற ு வகுக்கப்பட்டு, அண்மையில் ரூபா‌ய் 690 கோட ி 10 மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

* சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு, குவி‌ண்டால் ஒன்றுக்கு முறையே ரூபா‌ய் 850 மற்றும ் ரூபா‌ய் 880 என மத்திய அரசு கொள்முதல் விலைய ை நிர்ணயித்துள்ள போதிலும்; விவசாயிகளின ் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நிர்ணயித்துள் ள விலைக்குக் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கி, சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு குவி‌ண்டால ் ஒன்றுக்கு முறையே ரூபா‌ய் 1,000 மற்றும் ரூபா‌ய் 1,050 எ ன இந்த அரசு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ி வருகிறது. நடப்பாண்டில் 16.5 இலட்சம் டன் நெல ் கொள்முதல் செ‌ய்யப்படும்.

* கரும்பு கொள்முதல் விலையை, 811.80 ரூபா‌ய் என்ற அளவிலிருந்து, இரண்ட ு ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தாத போதும், விவசாயிகளின் நலன் கருதி கரும்பு விலையை டன ் ஒன்றுக்கு ரூபா‌ய் 1,050-ஆக இந்த அரச ு உயர்த்தியுள்ளது. இந்த விலை மேலும் உயர்த்தப்ப ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ரூபா‌ய் 1,100 என மேலும் உயர்த்த இந்த அரசு முடிவு செ‌ய்துள்ளது.

* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இதுவரை 54,28,204 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின ் நான்காவது கட்டமாக 41,62,500 வண்ணத ் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செ‌ய்யப்பட்ட ு நடப்பாண்டில் தொடர்ந்து வழங்கப்படும்.

* நிலத்தடி நீரில் ஃப்ளோரைடு அதிகம ் உள்ள தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின ் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வான ஒகேனக்கல ் கூட்டுக் குடிநீர்த் திட்ட‌த்தை விரைந்து செயல்படுத்திடத் தேவையா ன அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட ு வருகின்றன.

* இராமநாதபுரம், சிவகங்கை மற்றும ் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வறண் ட பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செ‌ய்வதற்கான ரூபா‌ய் 616 கோடி மதிப்பீட்டிலான இராமநாதபுரம் கூட்டுக ் குடிநீர்த் திட்டப்பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்ட ு வருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள ் நிறைவு பெறும்.

* தமி‌ழ்நாட்டில் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, அனைத்த ு மாணவர்களும் தரமான சமச்சீர் கல்வியைப் பெற இந் த அரசு ஆவன செ‌ய்யும்.

* சென்னை மாநகர மக்களின ் போக்குவரத்துத் தேவையை நிறைவு செ‌ய்திட, சாலைகளில் அதிகரித்துவரும் நெரிசலைக் குறைக்கக் கூடிய ரூபா‌ய் 14,600 கோடி மதிப்பீட்டிலான 'மெட்ர ோ ரயில்' திட்ட‌ப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும். மேலும், இந்தத் திட்டத்தில் திருவொற்றியூரும் இணைக்கப்ப ட வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இதற்கான விரிவான ஆ‌ய்வு உடனடியா க மேற்கொள்ளப்படும்.

* மனவளர்ச்சி குன்றியோருக்கு வருமான வரம்பு மற்றும் எண்ணிக்க ை வரையறையின்றி மாதாந்திர உதவித் தொகையாக ரூபா‌ய் 500 தொடர்ந்து வழங்கப்படும்.

* அருந்ததியர்க்கு 3 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவில ் நடைமுறைப்படுத்தி, மனிதக்கழிவை தலையில் சுமந் த மனிதர்களது தலைவிதியை மாற்றியமைத்து, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களின ் சமூகப்பொருளாதார முன்னேற்றத்தில் புதி ய அத்தியாயத்தைத் தொடங்கவும் இந்த அரசு ஆவன செ‌ய்யும்.

* இந்து, பௌத்த மதங்களைச் சார்ந் த ஆதிதிராவிடர்களுக்கு இணையாக; கிறித்தவ மதத்தைச ் சார்ந்த ஆதிதிராவிடர்களையும் அட்டவணைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முன்வ ர வேண்டு‌ம்.

* பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்க ு தேசிய அளவிலும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் எ ன நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில ் அமைக்கப்பட்ட தேசிய ஆணையம் செ‌ய்துள்ள பரிந்துரையினைப் பரிசீலனை செ‌ய்து, உரி ய அறிவிப்பினை வெளியிட வேண்டுமென்றும் மத்தி ய அரசை கே‌ட்டு‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments