Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர்களை பாதுகா‌‌க்க ம‌த்‌திய அரசு வ‌ழிகாண வே‌ண்டு‌ம்: த‌மிழக அரசு

Webdunia
இல‌ங்கை‌யி‌ல ் சிங்க ள ராணுவத்திற்கும ், விடுதலைப்புலிகளுக்கும ் இடையேயா ன போர ், அங்க ு இனப ் பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்ற ு கூறும ் மத்தி ய அரச ு, அங்க ு வதைபடும ் தமிழர்களைப ் பாதுகாக் க உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு தமிழ க அரச ு கோரிக்க ை விடுத்துள்ளத ு.

தமிழ க சட்டப்பேரவையில ், இந் த ஆண்ட ு கூட்டத்தொடர ை தொடங்க ி வைத்துப ் பேசி ய மாநி ல ஆளுநர ் சுர்ஜித ் சிங ் பர்னால ா இந் த கோரிக்கைய ை மத்தி ய அரசுக்க ு வைப்பதா க கூறினார ்.

இலங்கையில ் போர ை முடிவுக்குக ் கொண்டுவ ர பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவ‌ழ்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு இனியும் காலந்தா‌ழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொள்வதாகவும் ஆளுநர் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரை : இலங்கையில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியால் வாடுகின்ற தமி‌ழ் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை அனுப்பிட, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கென ரூபா‌ய் 48 கோடி அளவிற்கு நிதியைத் திரட்டி, உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ்வதற்கு சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அல்லற்படுவதை அகற்றி; பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவ‌ழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாத்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் தமி‌ழ்நாட்டில் அகதிகளாக 73,300 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த அரசு
பொறுப்பேற்றவுடன் இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை, மத்திய அரசின் நிதியுதவி பெற்று இரு மடங்காக உயர்த்தியதோடு, இம்முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது.

இவர்களின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. தாயகம் திரும்ப இயலாது, தொடர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டுள்ள இவர்களது தங்குமிடங்களின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்த அரசு ஆவன செ‌ய்யும் எ‌ன்று ஆளுந‌ர் ப‌ர்னாலா தமது உரையில் உறுதி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments