Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சுப்பிரமணியசுவா‌மி வழக்கு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:59 IST)
மதுரை‌யி‌ல் க‌ட்‌சி அலுவலக‌ம் தா‌க்க‌ப்ப‌ட்ட வழ‌க்கை ‌சி.‌பி.‌சி.ஐ.டி‌.‌க்கு மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அவ‌ர் தாக்கல் செய்துள்ள மனுவில ், மதுரையில் பி.பி.குளத்தில் எனது வீடு, கட்சி அலுவலகம் உள்ளது. நான் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறேன். அவர்களுக்கு எதிரான கருத்துக் கள ையும் கூறி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த 24.10.2008 அன்று மதுரையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தேசிய கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 பேர் ஊர்வலமாக வந்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது என் வீட்டையும் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக தல்லாகுளம் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக 3 சட்டக் கல்லூரி மாணவர்களை மட்டுமே கைது செய்தனர். எனவே இந்த வழக்கை உள்ளூர் காவ‌ல்துறை விசாரித்தால் விசாரணை சரியாக இருக்காது. எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எ‌ன்று கூற ியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று நீதிபதி கே.என்.பாட்சா முன ்‌னிலை‌யி‌ல் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, இவ்வழக்கில் 3 வார காலத்திற்குள் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி.யின் ஐ.ஜி., தல்லாகுளம் காவ‌ல்துறை இ‌ன்‌ஸ்பெ‌க்ட‌ர் ஆகியோருக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்ட ‌ நீ‌திப‌தி, வழ‌க்கு விசாரண ையை ‌பி‌ப்ரவ‌ரி 11ஆ‌ம் தேதிக்கு தள்ள ிவை‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

Show comments