Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தியூர் வனத்தில் மீண்டும் ஒரு பெண் யானை சாவு

ஈரோடு செ‌‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
அந்தியூர் வனப்பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண் யானை இறந்ததை‌த ் தொட‌ர்‌ந்த ு தற்போது மீண்ட ு‌ ம ் ஒரு பெண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் கடந்த வாரம் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு நோய்வாய்பட்டு சுமார் இருபத்தி ஐந்து வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்தது. தற்போது அந்தியூர் வனப்பகுதி செல்லப்பம்பாளையம் கிழக்கு வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

webdunia photoWD
இந்த தகவலில்பேரில் வனத்துறை அதிகாரி ஜெகநாதன் தலைமையில் வனத்துறையினர் ‌‌நிக‌ழ்‌விடத்திற்கு சென்று இறந்த யானையை பார்த்தனர். அப்போது புதரில் இருந்து சுமார் மூன்று வயது மதிக்கதக்க இறந்த யானையின் ஆண்குட்டியானை வனத்துறையினரை துரத்தியது.

இதனால் வனத்துறையினர் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். அ‌ப்போத ு நூறு மீட்டர் துரத்தில் யானை கூட்டம் ஒன்று நின்றுகொண்டு இறந்த யானையை கவனித்துக்கொண்டிருந்தது. இதனால் பயந்துபோன வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை துரத்தினர்.

பின்ன‌ர ் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்த ு பா‌‌ர்‌த்த‌தி‌ல ் நோய்வாய்பட்டு இறந்தது தெரியவந்தது. இதற்கும் சுமார் இருபத்தி ஐந்து வயது இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதயில் யானை இறந்துகிடந்ததால் இதன் உடல் மற்ற உயிரினங்களுக்கு இறைக்காக விடப்பட்டது.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments