Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவர் திருநாள்: 9 பேருக்கு தமிழக அரசு விருது

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (13:37 IST)
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 9 பேருக்கு இன்று விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறந்த நூல் ஆசிரியர்கள ், பதிப்பகத்தாருக்கு பரிசுகளையும ், தமிழ் அறிஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்க உள்ளார்.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் பரிதி இளம்வழுதி உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

பொற்கோவுக்கு திருவள்ளுவர் விருதையும், ஞான.ராஜசேகரனுக்கு பெரியார் விருதையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்க உள்ளார்.

இதேபோல் அம்பேத்கர் விருதை சோலை (எ) சோமசுந்தரமும், அறிஞர ் அண்ணா விருதை மறைமலையான் ஆகியோர் பெறுகிறார்கள்.

காமராஜர் விருது கோபண்ணாவுக்கும், பாரதிதாசன் விருது தமிழச்சி தங்கபாண்டியனுக்க ு, திரு.வி.க. விருது அருளானந்தத்திற்கும ், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பழமலைக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுடன், ரூ.ஒரு லட்சம் பொற்கிழ ி, தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Show comments