சென்ன ை: பிணக்குவியலுக்கு இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத்தமிழீழம் அழிந்து கொண்டு வரும் நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும் என்று கூறியுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்ச ித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசுகளுக்கு தமிழினத்தின் ஒற்றுமையை காட்டும் வகையில் ஒட்டுமொத்த தமிழினமும் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், ஈழத்தமிழர் இனத்தை அழிவின் விளிம்பிற்கு நெருக்கி தள்ளி, கொலைவெறி தணியாமல் கொடூரத்தின் உச்சத்தில் இருந்து கொக்கரிக்கிறது சிங்கள இனவெறி அரசு. பல்லாயிரக்கணக்கான சிங்கள இனவெறி படையினரை கொண்டு முல்லைதீவை சுற்றி வளைத்து, உலகத்தின் பிற பகுதிகளோடு எவ்வகையான தொடர்பும் இல்லாத அளவிற்கு துண்டித்துள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேர் மட்டும் வாழ முடியும் என்கிற அளவிலான நிலப்பரப்பையும், வாழ்வாதாரங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று சுமார் 5 லட்சம் பேர் வாழ வேண்டுமென்கிற நெருக்கடிக்கு சிங்கள இனவெறி அரசு தள்ளியிருக்கிறது. தரை வழியாகவும், கடல்வழியாகவும் சுற்றி வளைத்து தாக்குவது மட்டுமல்லாமல் வான்வழியாகவும் தாக்கி வருகிறது. மனிதநேயமற்ற இந்த இனவெறி கொடுமைகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில் சர்வதேச அரசுகள் துணை நிற்பது கொடுமையிலும் கொடுமை.
தமிழகத்திலும், பிற நாடுகளிலும் வாழ்கிற சுமார் 10 கோடி தமிழர்களுக்கும் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற வலியுறுத்தி மீண்டும், மீண்டும் கெஞ்சி கையேந்தி நிற்கின்ற நிலையிலும் இந்திய அரசு மனம் இரங்கவில்லை என்பது சிங்கள அரசின் கொடுமையை விட பெரிய கொடுமையாக உள்ளது.
பிணக்குவியலுக்கு இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத்தமிழீழம் அழிந்து கொண்டு வரும் நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும். இந்த நிலையில் மாறாத துயரத்தில் அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை முற்றிலும் தவிர்ப்பது என விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது.
சிங்கள மனிதநேயமற்ற இந்திய அரசுகளுக்கு தமிழினத்தின் ஒற்றுமையை காட்டும் வகையில் ஒட்டுமொத்த தமிழினமும் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்து ஈழத்தமிழினத்தின் துக்கத்தை, துயரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன உணர்வு பொங்கட்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.