ஈரோடு பகுதிகளில் பொங்கல் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுற்ற நிலையில் மக்களுக்கு தேவையான பொங்கல் பொருட்கள் சந்தைக்கு வருகிறது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தையும் விவசாயத்தை சார்ந்த தொழிலும் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வ ொர ு வருடமும் பொங்கல் பண்டிகை ஈரோடு மாவட்டத்தில் விமர்மையாக கொண்டாடுவது வழக்கம்.
கடந்த எட்டு நாட்களாக லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொண் டத ால் பொங்கலுக்கு தேவையான சரக்குகள் சந்தைக்கு வர தாமதம் ஏற்பட்டது. இதனால் கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் போட்டி போட்டனர்.
இந்த நிலையில் லாரி வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த காரணத்தால் சந்தைக்கு வரும் கரும்புகள் உள்ளிட்ட பொருட்களை லாரிகள் மூலம் விடிய, விடிய கொண்டு வருகின்றனர். இதனால் பொங்கள் பொருட்களை பொதுமக்கள் தட்டுப்பாடின்றி வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.