Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ம‌த்‌தி‌ய அரசு ‌மீது ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை எ‌ன்று ப ா.ம.க. ‌‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ், ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தொ‌ல ். ‌ திருமாவளவ‌ன ், ‌ திரா‌விட‌ர ் கழக‌த ் தலைவ‌ர ் ‌ க ி.‌ வீரம‌ண ி ஆ‌கியோ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌திய ை ச‌ந்‌தி‌த்த ு ‌ வி‌ட்ட ு வெ‌ளிய ே வ‌ந் த அவ‌ர்க‌ள ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், இலங்க ை‌ த ் தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திட்ட மன ு ஒ‌ன்ற ை முதலமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளோம் எ‌ன்றன‌ர ்.

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியில் இல‌ங்க ை அரச ு ஈடுபட்டுள்ளது எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய அவ‌ர்க‌ள ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த போது ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் இலங்க ை‌ த் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதிபேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதரவாக செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத ை முதலமைச்சரிடம் சுட்டி காட்டினோம் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

தமிழக‌த்‌தி‌ல ் ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மரியாதை இல்லை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அவ‌ர்க‌ள ், இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் எல்லாம் போரை நிறுத்தி விட்டு பேச்சு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன எ‌ன்பத ை ‌ நினைவு‌ப்ப‌‌டு‌த்‌தின‌ர்.

7 கோடி தமிழக மக்களும் எடுத்த முயற்சிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் உடனடியாக மத்திய அரசிடம் பேசுங்கள் எ‌ன்று‌‌ம ் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்துங்கள் என்ற ு‌ ம ் முதலமை‌ச்ச‌ரிட‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளோ‌ம ். அவரும் இன்று பேசுவதாக சொல்லி இருக்கிறார். அதை ஒரு அறிக்கையாக வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளோம் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்ததா க கூ‌றின‌ர ்.

இலங்க ை‌ த ் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற ம‌க்களவை‌த ் தேர்தலில் தமிழக‌த்‌தில் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளோம் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அவ‌ர்க‌ள ், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எ‌ன்று‌ம ் தமிழர்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவதாக இந்திய அரசின் நிலைப்பாடு இருக்க கூடாது. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற ு‌ ம ் வலியுறுத்தி உள்ளோம் என்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments