Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலு‌க்கு ‌திரையர‌ங்குக‌ளி‌ல் 5 காட்சிகளுக்கு அனுமதி

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (10:15 IST)
பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்ன‌ி‌ட்டு வரு‌கிற 14ஆ‌‌ம் தே‌தி முத‌ல் 18ஆ‌ம் தே‌தி வரை ‌ திரையர‌ங்குக‌ளி‌ல் அ‌திக‌ப்ப‌ட்டியாக 5வது கா‌ட்‌சி நட‌த்‌தி‌க் கொ‌ள்ள த‌‌மிழக அரசு அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு த ிரையர‌ங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொது செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழ்நாடு ‌ திரையர‌‌ங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர ‌ திரையர‌ங்குக‌ளி‌ல ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 14.1.2009 முதல் 18.1.2009 வரையுள்ள நாட்கள் அரசு விடுமுறையானதால் அதிகப்பட்டியாக ஒரு காட்சி, அதாவது 5வது காட்சி நடத்திக்கொள்ளலாம்.

மேலும், அரசு உத்தரவு படி, 19 மற்றும் 20 ஆ‌ம் தேதியும் அதிகப்படியாக ஒரு காட்சி (5 காட்சிகள்) நடத்திக்கொள்ளலாம். அதே போல் நடமாடும் ‌ திரையர‌ங்க ுகளுக்கு 19, 20 ஆ‌கிய தேதிகளில் ‌ ந‌ண்பக‌ல் காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும், 14 முதல் 18‌ ஆ‌ம் தேதி வரை காலை காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் அரசானை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு அதிகப்படியான காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments