Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவ‌ர்க‌ள் 29 பேரு‌க்கு நிபந்தனை ‌‌‌பிணை வழ‌ங்‌கியது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:07 IST)
செ‌ன்ன ை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல ் இர ு ‌ பி‌ரிவ ு மாணவ‌ர்களு‌க்க ு இடைய ே நட‌‌ந் த மோத‌லி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 29 பேரு‌‌ம ் '' வாரம் தோறும் சனி, ஞாயி‌‌ற்று‌க்கிழமைகளில் ஏதாவது ஒரு பொது நூலகம் சென்று அங்குள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்'' என்ற ‌நிப‌ந்தனையுட‌ன் அனைவரு‌க்கு‌ம் ‌பிணை வழ‌ங்‌கி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டது.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கடந்த நவம்பர் மாதம் 12ஆ‌ம ் தேதி மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இது தொடர்பாக செ‌ன்னை எஸ்பிளனேடு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து 50க்கும் மேற்பட்ட மாண‌வ‌ர்களை கைது செய்தனர்.

இ‌ந்த வழக்கில் கைதான முருகேசன், வெற்றி கொண்டான், இளையராஜா, சித்திரைச் செல்வன், சத்யராஜ், மணிமாறன், ரவிவர்மன் உள்ளிட்ட 29 பேர் ‌பிணை கேட்டு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல் செய்தனர்.

இதேபோல் கடந்தாண்டு காவ‌ல்துறை உத‌வி ஆணைய‌ர் ராஜாமணியை சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இளையராஜா, மணிமாறன், மாரிமுத்து உள்பட 11 பேர் மு‌ன் ‌பிணை கேட்டு மனுதாக்கல் செய்‌திரு‌ந்தன‌ர்.

இந்த இர‌ண்டு மனுக்களும் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி டி.சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் அவர்களது பெற்றோர் உத்தரவாத மனு ஒன்றைத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,"எதிர்வரும் காலத்தில் தங்களது மகன்கள் வன்முறை செயல்களில் ஈடுபடமாட்டார்கள்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தனர்.

இதனை ப‌திவு செ‌ய்து‌ கொ‌ண்ட நீதிபதி சுதந்திரம், கைத ு செய்யப்பட் ட 29 மாணவர்களுக்கும ் இன்ற ு நிபந்தனையுடன ் கூடி ய ‌ விடுதலை ‌பிணை வழங்கினார ். 5 ஆயிரம ் ரூபாய்க்க ு சொந் த ‌பிணையு‌ம், அத ே தொகைக்க ு ஒர ு நபர ் ‌பிண ையு‌ம் செலுத்த ி ‌ விடுதலை ‌ பிணை பெற்றுக்கொள்ளலாம ் என்ற ு நீதிபத ி உத்தரவிட்டார ்.

அத்துடன ் 4 வா ர காலத்திற்க ு இந் த மாணவர்கள ் சன ி மற்றும ் ஞாயிற்றுக்கிழமைகளில ் ஏதேனும ் ஒர ு பொத ு நூலகம ் சென்ற ு 2 மண ி நேரத்திற்க ு புத்தகங்கள ் படிக் க வேண்டும ் என்றும ், என் ன புத்தகங்கள ை படித்தார்கள ் என் ற விவரத்த ை 4 வா ர காலம ் கழித்த ு நீத ி மன்றத்தில ் அறிக்கையா க தாக்கல ் செய் ய வேண்டும ் என்றும ் நீதிபத ி தன்னுடை ய உத்தரவில ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments