கும்பகோணம் பகுதியில் பாலங்கள் கட்டுமானப்பணி ம ுடிந்ததும் ஏப்ரல் மாதத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் விடப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
webdunia photo
FILE
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்காக கூடுதலாக பேட்டரி கார்கள் வசத ியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வேல ு, சென்னை ச ென்ட் ரல் ரய ில் நிலையத்தில் ஏற்கனவே ஒரு பேட்டரி கார் இருந்தது. இப்போது கூடுதலாக 2 பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
விரைவு ரயில்களில் இணையதளம் ( இண்டர் நெட ்), இ. டிக்கெட் வசதியை பயன்படுத்தி பலரும் முன்பதிவு செய்து விடுகின்றனர் என்று தெரிவித்த வேலு, இதனால் ரயில் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள் என்றார்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் இதை தவிர்க்க ஆன்லைன் புக்கிங் வசதியை 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேலு.
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு விழுப்புரம், மாயவரம், கும்பகோணம், திருச்சி வழியாக மெயின் லைனில் ரயில் விடுவதற்கு விரைவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்த வேலு, கும்பகோணம் பகுதியில் பாலங்கள் கட்டுமானப்பணி நடந்து வருகிறது என்றும் அவை முடிந்ததும் ஏப்ரல் மாதத்தில் திருச்செந்தூருக்கு ரயில் விடப்படும் என்றார்.