Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய தே‌ர்த‌ல் ஆணைய‌ம் உ‌த்தரவு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (09:49 IST)
திருமங்கல‌த்‌தி‌ல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற ‌வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டதை தொட‌ர்‌ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை களை ம ீ‌றி வாக்காளர்களுக்குப் பணம், இலவச வ ே‌ட ்டி, சேலைகள் உள்ளிட் டவ‌ற்றை க‌ட்‌சி‌யின‌ர் கொடு‌‌த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக வாக்காளர்களுக்கு த ி. ம ு.க. வினர் தாராளமாக பணம் கொடுப்பதாக அ.இ.அ. த ி. ம ு.க. வும ், அதுபோல் அ.இ.அ. த ி. ம ு.க. வினர் பணம் கொடுப்பதாக த ி. ம ு.க. வும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்ததாக, இரு தொலைக்காட்சி ச ேனல்களில் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ‌ வ ீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இத‌ன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆ‌ட்‌சியரு‌க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு த ி. ம ு.க. வுக்கு தா‌க்‌கீது அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோ‌ல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அ.இ. அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலர் தண்டபானி மீதும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments