Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை அருங்காட்சியகத்தில் கடல் ஆமை கண்காட்சி 7ஆம் தேதி தொடக்கம்

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (11:23 IST)
கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த கண்காட்சி, செ‌ன்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக நூற்றாண்டு கூடத்தில் 7ஆம் தேதி தொடங்குகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, கடல் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த மாதங்களில் கடற்கரைக்கு வரும் பல ஆமைகள் படகுகளில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இது தவிர கடற்கரைக்கு வருபவர்கள் ஆமைகளை துன்புறுத்துவதாலும் இறக்கின்றன.

இந்நிலையில், கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் இப்போது நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியை, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சி.கே.ஸ்ரீதரன், வரு‌ம ் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 13ஆம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

உலகில் உள்ள பல வகை அரிய கடல் ஆமைகள், அவற்றின் வாழ்க்கை வரலாறு, கடல் ஆமைகள் அழிவதற்கான காரணங்கள், அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விவரங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments