Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம்: துணை ராணுவம் வருகை

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:48 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் இன்று மதுரை சென்றடைந்தனர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட மாநில அமைச்சர்கள் பலரும், தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல் 3 நாட்கள் திருமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அஇஅதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அவரது மனைவியும், துணைத் தலைவருமான ராதிகா உட்பட பலரும் தேர்தல் பிரசார களத்தில் இருப்பதால், திருமங்கலம் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக 8 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் இன்று மதுரை சென்று சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் ஓரிரு நாளில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments