ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கைத ் தமிழர்களுக்க ு எப்போத ு விடுதல ை, விடியல ் ஏற்படும ் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்க ையில், இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் தமிழ் இனத்தையே கூண்டோடு ஒழித்துவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
யாரும் வசிக்காமல், மக்களும் அவர்களைப் பாதுகாக்கப ் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில ், இலங்கையில் கிளிநொச்சியைப் பிடித்து விட்டதால் போர் முடிந்து விட்டது என்று அவர்களே கூட ஒப்புக்கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்.
அங்கே நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப ் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள்.
புலி பதுங்கினால் மேலும் தீவிரமாக ப ாய ும் என்பது தமிழ்ப் பழமொழி. எப்படியாயினும் இடையில் எமது ஈழத்தமிழர்கள் இப்படிக்கு குண்டுமழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓட வேண்டும ோ? இன உணர்வுமட்டும ா, மனிதநேயம் கூட செத்து விட்டதா என்று கேட்கத் தே ான்றுகிறத ு.