Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சிறப்பு திட்டத்தில் பதிவு புதுப்பிக்கலாம்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:16 IST)
அய‌ல்நாடு வேலைவா‌ய்‌ப்பு ‌நிறுவன‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பு ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் த‌ங்க‌ள் ப‌‌திவை புது‌‌ப்‌பி‌‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்க ு‌றி‌ப்‌பி‌ல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மரு‌த்துவ‌ர்க‌ள ், பொ‌றியாள‌ர்க‌ள ், வல்லுநர்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் ஆகியோரை அய‌ல ்நாடுகளில் பணியமர்த்தும் பணியை, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் செய்து வருகிறது.

சென்னையில் உள்ள இந்நிறுவனத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பல்வேறு காரணங்களால் தங்கள் பதிவை புதுப்பிக்க முடியாதவர்கள், ஜனவரி 1 ( நே‌ற்று) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை சிறப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம்.

புதுப்பிக்க விரும்புபவர்கள் பதிவு எண், தகுதிக்கான சான்றுகளில் நகல்கள் 2 பிரதிகள், புதுப்பித்தல் கட்டணமாக இந்நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.112க்கான வரைவோலை ஆகியவற்றை எடுத்து, ''அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்ன- 600 020’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்கள் அறிய 044-24464268 அல்லது 044-24464269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments