Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌க்குன‌ர் ச‌ங்க உறுப்பினர்கள் மட்டுமே இ‌னி படம் இயக்க முடியும்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:07 IST)
'' தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினராக இருந்தால்தான் தமிழ் படம் இயக்க முடியும ்'' என்று சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பாரதிராஜா, பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணை தலைவர்கள் விக்ரமன், சசி மோகன், இணைச் செயலாளர்கள் லிங்குசாமி, அமீர், சண்முக சுந்தரம், ஏகாம்பவாணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை இய‌க்குன‌ர் கே.பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தினார ்.

இத‌ன் பிறகு பொது‌ச் செயலாள‌ர் ஆர்.கே.செல்வமணி பேசுகை‌யி‌ல், 35 ஆண்டு சினிமா சரித்திரத்தில் இப்போதுதான் முதன்முறையாக 1200 பேர் சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பம் பெற்றிருக்கிறார்கள். இனிமேல், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழ் படங்களில் பணிபுரிய முடியும்.

இந்த நிபந்தனை உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும் பொங்கல் முதல் உதவி இயக்குனர்களுக்கு சங்க வழியில் சம்பளம் வழங்கப்படும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒத்துழைப்பு தர வேண்டும் எ‌‌ன்றா‌ர்.

‌ வ ிழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கலைப்புலி ஜி.சேகரன், ராதாரவி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments