Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ரிவாயு டேங்கர் லாரி வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌கிறது

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:03 IST)
வாடகையை உயர்த்தி தரக்கோரி 3,500 டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளதா‌ல் எ‌ரிவா‌யு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, கொச்சி போன்ற இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எ‌ரிவாயு நிரப்பும் பாட்லிங் பிளான்ட்களுக்கு டேங்கர் லாரிகளில் கே‌ ஸ் எடுத்து செல்லப்படுகிறது.

இதற்காக எண்ணெய் நிறுவனங்களுடன், லாரி உரிமையாளர்கள் செய்து கொண்ட வாடகை ஒப்பந்தம் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிந்தது. இதை‌த்தொட‌ர்‌ந்து நட‌ந்த புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், 3,500 டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட்டுள்ளனர்.

தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திக் க ூறுகை‌யி‌ல், கட்டுபடியான விலை நிர்ணயிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எ‌ன்றா‌‌ர்.

7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் 50 பாட்லிங் பிளாண்டுகளுக்கு க ேஸ் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளத ு. இதனால், தினமும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது எ‌ன்று கா‌ர்‌த்த‌ி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எ‌ன்று‌ம் வேலை ‌நிறு‌த்த‌ம் சில நாட்கள் நீடித்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் கே‌ஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் எ‌ன்றா‌ர் கார்த்த ி‌க்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments