Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஞ்ச‌ல் மூல‌ம் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (18:38 IST)
பிர‌சி‌த்‌தி‌ப் பெ‌ற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் அஞ்சல் துறை ஒரு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், அஞ்சல் துறையும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அத‌ன்படி, நாட்டில் எங்கிருந்தும் அஞ்சல் மூலம் இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக ரூ.210- ஐ மணியார்டர் மூல‌ம் " நிர்வாக அதிகார ி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலை பத்தினம்திட்டா மாவட்டம ், கேரளா-689 713" என்ற முகவரிக்கு அனுப்ப ி வை‌த்த‌ா‌ல் ஐயப்பன் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

இந்தத் தொகை சாதாரண அல்லது "ஸ்பீடு போஸ்ட் மணியார்டர ்" மூலமே அனுப்பப்பட வேண்டும ். இந்த பிரசாதத்தில் அரவண டின், அப்பம், ஐயப்பன் படம், விபூதி, சந்தனம் ஆகியவை இருக்கும்.

மண்டல பூஜை, மகரவிளக்கு மற்றும் வ ிஷு திருவிழாக்களின் போது சபரிமலைக்கு வரஇயலாத பக்தர்களுக்கு இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments