Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற கிளை : வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வேலை‌நிறு‌த்த‌ம்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (18:08 IST)
சென்னையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற கிளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று தொடர் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

தென்னிந்திய மாநிலங்கள் பயன்பெறும் வகையில், உ‌ச்ச ‌நீ‌திம‌ன் ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள திறமையான வழ‌க்க‌றிஞ‌ர்களை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.

வக்கீல் சேமநல நிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் ஆ‌கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் ‌ நீ‌திம‌ன்ற‌த்தை புறக்கணிக்க தமிழ்நாடு, புதுச்சேரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் வழ‌க்க‌றிஞ‌ர்‌க‌ள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ‌ நீ‌திம‌ன்ற‌ங்களை‌ப் புறக்கணித்துவிட்டு அவ‌ர்க‌ள் ஆர்ப்பாட் ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர ். இதனால் ‌ நீ‌திம‌ன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ம் 31 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

புத்தாண்டில் தங்கம் வாங்க போறீங்களா? இன்று மட்டும் 320 ரூபாய் உயர்வு..!

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

Show comments