Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப.வீரபாண்டியன் பேச்சுக்கு ‌தி.மு.க. கண்டனம்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (10:18 IST)
திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பே‌ச்சு‌க்கு தி.மு.க தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், விடுதலை சிறுத்தைகள் கடந்த 26ஆம் தேதி நடத்திய மாநாட்டில், சுப.வீரபாண்டியன் பேசும்போது, 'சத்திய மூர்த்தி பவனை விடுதலைச் சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே திருமாவளவன் உத்தரவிட்டு இருந்தால், சத்திய மூர்த்தி பவன் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும ்' என்று பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எந்த ஒரு பேச்சாளரும் தேர்தல் ஆணைய‌த்தா‌ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலக கட்டடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்வதோ, தகர்ப்போம் என்று பேசுவதோ, ஒரு ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஆனால், சுப.வீரபாண்டியன் பேச்சு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. எனவே, திமுக சார்பில் சுப.வீரபாண்டியனுடைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறே‌ன் எ‌ன்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments