Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் தொகுதியில் 26 பேர் போட்டி: அ‌திகார‌பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (10:16 IST)
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க, அ.இ.அ.‌‌தி.மு.க., தே.மு.தி.க, ச.ம.க உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளது.

நே‌ற்று நடைபெற்ற வேட்புமனு வாப‌சில் சுயேச்சை வேட்பாளர் (திரைப்பட நடிகர்) ஏ.பி. பரதன் தனது மனுவை வாபஸ் பெற்றார். மேலும், வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த 4 பேரின் மனுக்களும் தகுதியிழப்பு செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு "சின்னங்கள்' ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து தொகுதியின் தேர்தல் அதிகாரியான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் க ூறுகை‌யி‌ல், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 36 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 31 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சியை சேர்ந்த மாற்று வேட்பாளர்களது மனுக்களும் வாபஸ் ஆயின. இதன்படி 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்அகர வரிசைப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என்று பிரிக்கப்பட்டு வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் வெ‌ளி‌யி டப்பட்டு உள்ளது.

முத்துராமலிங்கம் ( அ.இ. அ.தி.மு.க.)-இரட்டைஇல ை, லதாஅதியமான் (தி.மு.க.)-உதயசூரியன ், தனபாண்டியன் (தே.மு.தி.க.)-முரச ு, பத்மநாபன் (சமத்துவ மக்கள் கட்சி)-டார்ச்லைட ்.

இத்தேர்தலில் மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். வரும் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது ஒ‌வ்வொரு வா‌க்குசாவடி‌யிலு‌ம் 2 ‌மி‌ன்னணு இய‌ந்‌திர‌ங்க‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படும் என தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments