Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ, ‌திருமாவளவ‌‌ன், பழ.நெடுமாற‌ன் ‌‌மீது த‌‌மிழக அரசு நடவடி‌க்கை: கா‌ங்‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (15:21 IST)
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது சட்டப்படி குற்றம் என தெரிந்தே அவர்களுக்கு ஆதரவு தெரிவ ி‌த்து வரு‌ம் வைகோ, தொல ். திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் மு‌ன்னா‌ள் ச‌ட்ட‌ப்பேரவை தலைவ‌ர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் வலியுறுத்த ிய ுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ஆம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளால் இந்த நோக்கம் சிதைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த உடன்பாட்டின் சிற்பியான தலைவர் ராஜீவ்காந்தியின் உயிர் விடுதலைப்புலிகளால் தமிழக மண்ணிலேயே பறிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது இந்திய அரசு தடை விதித்தது. அதன் பிறகும் ‌ விடுதலை‌ப ்புலிகளுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவர்கள் முன்வைக்கும் தமிழீழ ஆதரவு கோரிக்கை பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்டு அமைந்திருக்கிறது.

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து குரல் கொடுப்பதால் காங்கிரஸ் கட்சியின் மீது ஆத்திரமும், கோபமும் கொப்பளிக்கின்றன. அதன் விளைவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஊழியர்கள் தாக்கப்படும் நிலை உருவானது.

தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்துவதில் விடுதல ை‌ச் சிறுத்தைகள் கட்சி பிடிவாதமாக உள்ளது. ம. த ி. ம ு. க பொதுச்செயலர் வைகோ, புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று முழக்கமிடுகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போன்றவர்களும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பது தமிழக அரசுக்கு தவிர்க்க முடியாத கடமையாகும். எனவேதான், இவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்த ி‌த் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு எதிராக இருப்பவர்களுக்கு பல அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகளில் இறங்குமாறு தமிழக அரசை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கே‌ட்டு‌‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments