சென்ன ையை அழகுப்படுத்துவதில் வெற்றி பெறவேண்டுமானால் கூவத்தை 'தேம்ஸ ்' நதி போன்று மாற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார ்.
35- வது இந்திய சுற்றுலா -அண்ணா நூற்றாண்டு தொழில் பொருட்காட்சி தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நடந்தது.
webdunia photo
FILE
பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், சென்னை மாந கரை அதிகாரிகளும், அலுவலாளர்களும், மேயர் போன்றவர்களும் முயற்சி எடுத்து, சென்னைக்குள் நுழைந்தாலே ஒரு பெரிய பொருட்காட்சியைப் பார்ப்பது போன்று அளவிற்கு சென்னை மாநகரம் நிர்மாணிக்கப்பட்டாக வேண்டும்.
கூவத்தை அழகுபடுத்துவதற்காக எடுத்த முயற்சிகளெல்லாம் இதுவரையிலே வீணாகத்தான் ஆகியிருக்கிறது. அந்த முயற்சிய ில் வெற்றி பெற மாற்றுத் திட்டங் களைக் கொண்டு வந்து கூவத்தைத் தமிழகத்தினுடைய 'தேம்ஸ ்' நதிபோல மாற்றும் முயற்சிய ில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்பொழுதுதான் சென்னை மாநகரத்தை அழகுபடுத்துவதிலே நாம் வெற்றி பெற்றோம் என்று மார்தட்டிக் கொள்ளமுடியும்.
பத்தாண்டுகளுக்குமுன் சென்னையைப் பார்த்தவர்கள் இன்றைக்குப் பார்த்தால், அதனுடைய உருவம் மாறியிருப்பதைக் காணமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள். இவைகள் சென்னையின் அழகைப் பார்க்கமுடியாத அளவிற்கு மறைத்துக் கொண்டிருந்தன.
அவைகளையெல்லாம் அங்கிருந்து அகற்ற பட்ட பாடு நான் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகப் பட்ட பாட்டைவிட அதிகம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே, எவ்வளவோ பேருடைய தடைகளுக்கிடையே, நீதிமன்றத்திலே போராடி பெற்ற வெற்றிதான், இன்றைக்குச் சென்னை மாநகரத்திலே ஆங்காங்கு தழைத்த மரங்கள், செடி, கொடிகள், இவைகளைக் காண ஒரு அற்புதமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதை யாராவது பாராட்டுகிறார்களா என்றால் பாராட்டமாட்டார்கள். காரியங்களை செய்வதில நமக்கு ஆத்ம திருப்தி. மற்ற ஆத்மாக்கள் பாராட்டினால் என்ன, பாராட்டாவிட்டால் என்ன? ஏழை ஆத்மாக்கள், எளிய ஆத்மாக்கள், சாதாரண, சாமானிய ஆத்மாக்கள், நம்மைப் பாராட்டுகின்ற அளவிற்கு நம்முடைய பணி தொடரவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.