Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: த‌‌மிழக ராணுவ வீரர் பலி

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (13:41 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌‌தீ‌விரவா‌திகளுட‌ன் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச் ச‌ண்டை‌யி‌ல் த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த ராணுவ ‌வீர‌ர் ப‌லியானா‌ர்.

நீலகிரி மாவட்டம ், ஊட்டி அருகேயுள்ள உல்லட்டி மேலூரை சேர்ந் தவ‌ர் மஞ்சுநாத் (25). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.

காஷ்மீரில் பணியாற்றி வந்த ம‌ஞ்சுநா‌‌த், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவ வீரர் களுட‌ன் அவ‌ர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென ்றா‌ர். அ‌ப்போது தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவ‌த்‌தின‌ர் அதிரடி தாக்குதல் நடத்தி ன‌ர்.

ப‌திலு‌க்கு தீவிரவாதி களு‌ம் கடு‌ம் துப்பாக்க ி‌ச் சண்ட ை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதில் த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த மஞ்சுநாத் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் இன்று கோவை கொண்டுவரப்பட்டது.

பின்னர் சொந்த ஊரான உல்லட்டி மேலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு அமைச்சர் ராமச்சந்திரன், மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ஆனந்த் பாட்டீல ், ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பின்னர் மஞ்சுநாத் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments