Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு கைது

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (19:11 IST)
விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவனை கைது ச‌‌ெ‌ய்‌‌ய‌க்கோ‌ரி சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்ட த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கே.‌வி. த‌ங்கபாலு தே‌னி‌யி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

அவருட‌ன் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜே.எ‌ம். ஆரூ‌ண், ‌கிரு‌ஷ்ணமூ‌‌‌ர்‌த்‌தி ம‌ற்றும் 300 தொ‌ண்ட‌ர்க‌ளு‌‌ம் இ‌ன்று கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைமையகமான செ‌ன்னை ச‌த்‌தியமூ‌‌‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தொ‌‌ண்ட‌ர்க‌ள் தா‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
இ‌த்தகவலைய‌றி‌‌ந்த ‌த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு, ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவனை கை‌து‌ செ‌ய்ய‌க்கோ‌ரி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜே.எ‌‌ம். ஹாரூ‌ண், ‌கிரு‌ஷ்ணமூ‌‌‌ர்‌த்‌தி ம‌ற்று‌ம் 300‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தொ‌‌‌ண்ட‌ர்களுட‌ன் தே‌னி‌யி‌ல் க‌ட்‌சி தொ‌‌ண்ட‌ர்க‌ள் கூ‌ட்ட‌‌ம் நட‌ந்த ‌தியாகராஜ‌ன் ‌திருமண அர‌ங்‌கி‌ல் இரு‌ந்து ஊ‌ர்வலமாக‌ச் செ‌ன்றா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் தே‌னி - பெ‌ரியகுள‌ம் சாலை‌யி‌ல் அம‌ர்‌ந்து ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட அவ‌ர்க‌ள் ‌திருமாவளவ‌னி‌ன் க‌ட்-அவு‌ட்டு‌க்கு ‌தீ வை‌‌த்தன‌ர். இதை‌த்தொட‌ர்‌ந்து இ‌தை‌த்தடு‌க்க வ‌ந்த காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் தொ‌‌ண்ட‌ர்களு‌க்கு‌ம் இடையே மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

இதையடு‌த்து ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட த‌ங்கபாலு உ‌ள்பட அனைவரையு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Show comments