சென்னையில இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், " இடைத்தேர்தல் என்றாலே பணபலம் மட்டும் தீர்மானிக்கும் சக்தியாக மாறி விட்ட சூழலில் திருமங்கலம் தொகுதியும் அதற்கு விதிவிலக்காக இருக்காத ு" என ்றார்.
ஆகையால், திருமங்கலம் சட் டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறது என்றும் புதிய தமிழகம் கட்சியினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்போம் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.