விசாரணை ஆணையத்தின் முன் இருக்கும் சிறுதாவூர் பிரச்சனை குறித்து கருணாநிதி ஒரு சிலரைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தச் செய்வது, அது குறித்து கருத்து தெரிவிப்பது விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்குவதற்குச் சமம் என்ற ு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலித ா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுதாவூர் பிரச்சனை என்று வந்தால் நான் மவுனம் சாதிப்பதாகக் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, மக்களை திசைதிருப்பும் செயலாகும்.
சிறுதாவூர் பிரச்சினை குறித்து 2006ஆம் ஆண்டே நான் விரிவான அறிக்கை வெளியிட்டு, இது குறித்த உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அறிவித்தேன். சிறுதாவூரில் நான் எந்த நிலத்தையும் வாங்கவில்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் அங்கே செல்லும்போது தங்குகிறேன் என்று அப்போதே விளக்கி விட்டேன்.
தற்போது, விசாரணை ஆணையத்தின் முன் இருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து கருணாநிதி ஒரு சிலரைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தச் செய்வது, அது குறித்து கருத்து தெரிவிப்பது விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்குவதற்குச் சமம்" என்ற ு ஜெயலலித ா கூறியுள்ளார்.