Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை மிதித்து பெண் சாவு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு மாவட்டம் கோபி அருகே யானை மிதித்து பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது பங்களாபுதூர். இங்கு வசிப்பவர் ராஜேஸ்வரி (45). இவர் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனியாக வசித்து வந்தார். இவர் ஆடுகள் வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து பிழப்பு நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற ராஜேஸ்வரி வீடு திரும்பவில்லை. ஆனால் ஆடுகள் வீட்டிற்கு வந்துவிட்டது.

இதனால் பதறிய உறவினர்கள் வனப்பகுதிக்குள் ராஜேஸ்வரியை தேடி சென்றனர். அப்போது மாதையன் கோவில் அருகே தலை, உடல் நசுங்கிய ‌நிலை‌யி‌ல் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார்.

காட்டு யானை மிதித்து ராஜேஸ்வரி இறந்தது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments